மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 03.09.2020 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
 
                        பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்கு எமது பிரதேச செயலக பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்கு இணைத்தலைவராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்கள் மற்றும் கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் , கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
                  மேலும் மாந்தை மேற்கு கௌரவ பிரதேச சபை தவிசாளர் கௌரவ உறுப்பினர்கள் , இணைப்பாளர்கள் , திணைக்கள தலைவர்கள் , அதிகார சபையின் தலைவர்கள் , அலுவலக பதவி நிலை அலுவலர்கள் , பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
                   இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் அணைவரையும் வரவேற்றதுடன் இக் குழுக்கூட்டத்தின் மூலம் மக்களின் தேவைகளை இனங்கண்டு அத்தேவைப்பாடுகளை அதி மேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமருக்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததுடன் கிராம மட்டத்தில் இருந்து ஏற்படுத்தும் அபிவிருத்தியே நிலையான அபிவிருத்தி எனவே அதற்கு அணைவரையும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
 
IMG 53ee72c241b1003b3a77e3a317b88b5a V
                                                                                                         IMG d132e349c29758668fdf6ed34c110ecf V

News & Events

03
Sep2020
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட நிகழ்வு

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட நிகழ்வு

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்பு...

24
Aug2020
மாந்தை மேற்கு பிரதேச விளையாட்டுவிழா

மாந்தை மேற்கு பிரதேச விளையாட்டுவிழா

எமது மாந்தை  மேற்கு பிரதேச ெசயலகத்தின்  ஏற்பாட்டில் 21ம் மற்றும்...

27
Jul2020
European Union நிதிஅனுசரனையில் எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிதி வழங்கும்  நிகழ்வு

European Union நிதிஅனுசரனையில் எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிதி வழங்கும் நிகழ்வு

எமது  பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளா்  தலைமையில்  European Union நிதிஅனுசரனையில் விழுதுகள் ...

16
Jul2020
எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு  நிகழ்வு

எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வு

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவலகர்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் ...

Scroll To Top