வடக்கு மாகாண பண்பாட்டு அலுவலகர்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் எமது பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு 2020 , 16.07.2020 இன்று பிரதேச செயலாளா் செ.கேதீஸ்வரன் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. திருகேதீச்சர ஆலய பிரதமகுரு மதிப்பிற்குரிய சிவசிறி கருணானந்த குருக்கள், அடம்பன் தேவாலய அருட்தந்தை வணக்கத்திற்குரிய நவரத்தினம் அடிகளாா், சொா்ணபுரி பள்ளிவாசல் மௌலவி முனைவர் ஆகிய மும்மததலைவர்களும் இதில் பங்குபற்றி இருந்ததோடு கொழுக்கட்டையும் ஆடிக்கூழும் பாிமாறி இன்றைய நிகழ்வு இனிதே சிறப்புற நிறைவு பெற்றது.



எமது பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் 2019 ம் ஆண்டிற்கான சிறுவர் தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக 13.10.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மன்/ஈச்சளவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கொண்டாடப்பட்டது.
மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.எஸ்.கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.எஸ்.லோகேஸ்வரன் பிரதிக்கல்வி பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) மடு வலயம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக உதவிக்கல்வி பணிப்பாளர் (முன்பள்ளி) மடு வலயம் அவர்களும், அடம்பன் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரும், இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரும், கலந்துகொண்டனர். மேலும் கௌரவ விருந்தினர்களாக அருட்தந்தை அருட்குமரன் அடிகளாரும், மௌலவி N.M.M.ரிஸ்வான் அவர்களும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் அயல் கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த பல சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதன்போது பல கலை நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு, கலந்துகொண்ட சிறுவர்கள் அனைவரும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.








Cultural Vizha - Divisional Secretariat Manthai west 02.11.2018
நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக அவதியுறும் கூராய் கிராம அலுவலர் பிரிவில் சீதுவிநாயகர்குள கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம்
தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணத்தால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கூராய் கிராம அலுவலர் பிரிவில் சீதுவிநாயகர்குள கிராம மக்களுக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ அலகின் ஏற்பாட்டில் 10.07.2019 அன்று குடிநீர் விநியோகிக்கப்பட்டது.



Page 2 of 2














